தொழில்நுட்பம்
மோட்டோரோலா

இணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்

Published On 2020-01-28 11:54 GMT   |   Update On 2020-01-28 11:54 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் எனும் பெயரில் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இது பிப்ரவரி 23-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.



கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படும் என்றும் இதில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.

புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை மோட்டோரோலா அனுப்பி வருகிறது. அழைப்பிதழில் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் எட்ஜ் என்ற வார்த்தையை குறிப்பிடும் வாசகம் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. இதுதவிர ஸ்மார்ட்போன் இதர விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News