செய்திகள்
வகுப்பறை

தெலுங்கானாவில் ஊரடங்கு முடிவுக்கு வந்தது- ஜூலை முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

Published On 2021-06-19 13:16 GMT   |   Update On 2021-06-19 13:16 GMT
ஊரடங்கின்போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் முழு அளவில் அகற்றும்படி அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. 

இந்நிலையில், நாளை முதல் ஊரடங்கு முற்றிலும் நீக்கப்படுவதாகவும், எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது என்றும் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும், ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்கவும் அறிவுறுத்தி உள்ளது. இதற்காக முழு அளவில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும், மாணவர்களை நேரடி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.



மேலும், ஊரடங்கின்போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் முழு அளவில் அகற்றும்படி அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. 


வெள்ளிக்கிழமை நிலவரப்படி தெலுங்கானாவில், கொரோனா பாதிப்பு விகிதம் 1.14 சதவீதமாக குறைந்திருந்தது. தினசரி பாதிப்பு 1400 ஆகவும், உயிரிழப்பு 12 ஆகவும் இருந்தது.
Tags:    

Similar News