ஆட்டோமொபைல்

இந்தியாவில் ஸ்கோடா கோடியக் எல் கே எடிஷன் அறிமுகம்

Published On 2018-02-17 10:11 GMT   |   Update On 2018-02-17 10:11 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் ஃபிளாக்ஷிப் மாடலின் எல்&கே எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் எல்&கே எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாப்-எண்ட் கோடியக் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. 2018 ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

வழக்கமான ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை விட கோடியக் லாரெண்ட் & கிளிமெண்ட் எடிஷன் உள்புறம், வெளிப்புறம் மற்றும் இன்ஜின்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. கோடியக் எல்&கே எடிஷனின் உள்புறத்தில் லெதர் இருக்கைகள், கன்சோலில் பியானோ-பிளாக் ட்ரிம், கேண்டன் சவுண்டு சிஸ்டம், கோடியக் முத்திரை கொண்ட டோர் சில்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் அலுமினியம் பெடல்கள், பவர்-அட்ஜஸ்ட் வசதி கொண்ட ஓட்டுநர் இருக்கை, ஆட்டோமேடிக் வைப்பர்கள், ஆட்டோ-டிம்மிங் வசதி கொண்ட பின்புற கண்ணாடிகள், ஆம்பியன்ட் லைட்டிங் வசதி மற்றும் உள்புற இருக்கைகளில் லாரென் & கிளிமெண்ட் முத்திரை இடம்பெற்றிருக்கிறது.



ஸ்கோடா எல் & கே எடிஷனின் இன்ஜின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. கோடியக் எல் & கே எடிஷனில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் 188 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இதன் முந்தைய இன்ஜின் 177 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜின்களுடன் 7-ஸ்பீடு DSG வழங்கப்படுகிறது.

சக்திவாய்ந்த இரண்டு இன்ஜின்களிலும் 4x4 டிரைவ் வசதி வழக்கமாக வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை ஆப்ஷன்களாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஸ்கோடா கோடியக் எல் & கே மாடலின் ஆல்-வீல் டிரைவ் வேரியண்ட்களில்  அடாப்டிவ் சேசிஸ் கண்ட்ரோல் (DCC) ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News