செய்திகள்
முதியோர்

முதியோர்கள் குறைகளை தெரிவிக்க உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு

Published On 2019-11-27 02:43 GMT   |   Update On 2019-11-27 02:43 GMT
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, முதியோர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

மூத்த குடிமக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம்-2007 தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

மேலும், முதியோர்களுக்கு தேவையான உதவிகளை பெற கட்டணமில்லா உதவி எண்ணாக சென்னைக்கு மட்டும் 1253 என்ற எண்ணும், சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு 18001801253 என்ற எண்ணும் பொது சேவை எண்ணாக ‘ஹெல்ப் ஏஜ்’ இந்தியா என்ற தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர்களும் பயனடையும் நோக்கில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, முதியோர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற 044-24350375 என்ற தொலைபேசி எண்ணும், 9361272792 என்ற செல்போன் எண்ணும் அறிவிக்கப்படுகிறது.



முதியோர்களின் அனைத்து தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிப்பதற்கு இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News