வழிபாடு
கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா (பழைய படம்)

கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது

Published On 2022-03-24 04:49 GMT   |   Update On 2022-03-24 08:26 GMT
கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் வருடம் தோறும் மீன பரணி நாளில் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருட திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லை பகுதியில் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 2 கோவில்கள் அம்மனுக்கு உள்ளது. ஒன்று வட்டவிளை கோவில் மற்றொன்று திருவிழா கோவிலான வெங்கஞ்சி கோவில் ஆகும்.

இங்கு வருடம் தோறும் மீன பரணி நாளில் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருட திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5.30 மணிக்கு பிரதான கோவிலில் மகா கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு வெங்கஞ்சி திருவிழா கோவிலில் மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு மேளதாளங்களுடன் கோவிலுக்கு கொடிமரம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடக்கிறது,

பின்னர் இரவு 7 மணிக்கு தேவஸ்தான தந்திரி கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

இரவு 8 மணிக்கு தூக்க திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை பள்ளியுணர்த்தல், நிர்மல்ய தரிசனம், அபிஷேகம், கணபதிஹோமம், சோபனசங்கீதம், மதிய பூஜை, அன்னதானம், மாலை தீபாராதனை, இரவு பூஜை, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. அதை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது,

28-ந்தேதி காலை 8 மணி முதல் தூக்க காரர்களின் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. 29-ந்தேதி காலை 9 மணி முதல் தூக்க நேர்ச்சை நடத்த பதிவு செய்திருந்த குழந்தைகளின் தூக்க நேர்ச்சை குலுக்கல் நடக்கிறது, 30-ந்தேதியில் இருந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நடக்கிறது.

ஏப்ரல் 4-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளல் நடக்கிறது. அதை தொடர்ந்து பரிபாவனமும் பக்தி பரவசமும் வரலாற்று சிறப்புமிக்கதுமான தூக்க நேர்ச்சை நடக்கிறது. தொடர்ந்து தூக்ககாரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. திருவிழாவை காண தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். பக்தர்கள் வசதிக்காக தமிழக-கேரள போக்குவரத்துக்கழகத்தினர் சிறப்பு பஸ்களை இயக்குகிறார்கள்.
Tags:    

Similar News