தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்

விரைவில் வாட்ஸ்அப் வரும் இரு புதிய அம்சங்கள்

Published On 2020-10-25 03:45 GMT   |   Update On 2020-10-24 12:11 GMT
வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்பில் அவ்வப்போது புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வாட்ஸ்அப்  நிறுவனம் தனது பீட்டா செயலியில் 2.20.203.3 அப்டேட்டை வெளியிட்டு உள்ளது. 

புதிய அப்டேட்டில் மிஸ்டு கால்களில் இணைவது, பேஸ் அன்லாக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. தற்சமயம் க்ரூப் கால்களை ஏற்கவில்லை எனில், கால் செய்தவர் முயற்சிக்காமல் பயனர்களால் அதில் இணைய முடியாது. 



தற்சமயம், இந்த பிரச்சனையை தீர்க்க மிஸ்டு கால்களில் இணைந்து கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. இந்த வசதி க்ரூப் கால் நிறைவுறும் வரையில் செயல்படும். இதனை இயக்க பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை திறந்தாலே போதுமானது. பின் திரையில் அழைப்பில் இணைந்து கொள்ள கோரும் ஆப்ஷன் தோன்றும்.

இத்துடன் செயலியின் பாதுகாப்பை மேம்படுத்த கைரேகை வசதியுடன் பேஸ் அன்லாக் வசதியும் வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் பேஸ் அன்லாக் வசதி அதிக பிரபலமாகி வருவதை அடுத்து வாட்ஸ்அப் இதனை தனது செயலியில் சேர்ப்பதற்கான சோதனையை துவங்கி இருக்கிறது.
Tags:    

Similar News