ஆன்மிகம்
கொடியேற்றத்தை தொடர்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது எடுத்தபடம்.

குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா தொடங்கியது

Published On 2019-09-04 04:47 GMT   |   Update On 2019-09-04 04:47 GMT
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 9-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு உருகுசட்ட சேவை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு ஆறுமுகப்பெருமான் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் நெல்லை டவுனுக்கு எழுந்தருளுகிறார். டவுனில் 2 நாட்கள் தங்கி இருக்கும் சுவாமி, பின்னர் மீண்டும் கோவிலை வந்தடைகிறார்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு சுவாமி முருகப்பெருமான் தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 13-ந்தேதி காலை 10 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

14-ந்தேதி நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப உற்சவம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன ஊழியர்கள், பக்தர்கள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News