உள்ளூர் செய்திகள்
நீலகிரி மாவட்ட கலெக்டர்

நீலகிரியில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

Published On 2022-01-11 10:07 GMT   |   Update On 2022-01-11 10:07 GMT
நீலகிரியில் உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி திருவள்ளுவர் தினம், 18-ந் தேதி வள்ளலார் நினைவு நாள், 26-ந் தேதி குடியரசு தினம் ஆகிய 3 நாட்கள் தமிழ்நாடு மதுபான விதிகளின் படி டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், கிளப்புகள், ஓட்டல் பார்கள் ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யக்கூடாது.

மேற்கண்ட நாட்களில் கட்டாயம் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள், கிளப்புகள், ஓட்டல் பார்கள் மற்றும் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் மூடப்பட வேண்டும்.

இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பதாக தகவல் தெரிந்தால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை 0423-2223802 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News