செய்திகள்
கோப்புபடம்.

கொரோனாவால் இறந்த ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரம்

Published On 2021-07-14 10:00 GMT   |   Update On 2021-07-14 10:00 GMT
பள்ளிகள் திறக்கும்போது ஆசிரியர்கள் காலிப்பணியிடம் இருந்தால் அதனை நிரப்ப கணக்கெடுப்பு தேவை.
திருப்பூர்:

கொரோனா இரண்டாவது அலையில் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை கணக்கெடுத்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து  திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளிகள் திறக்கும்போது ஆசிரியர்கள் காலிப்பணியிடம் இருந்தால் அதனை நிரப்ப இந்த கணக்கெடுப்பு தேவை. 

இதனால் மாவட்டங்கள் தோறும் உள்ள அனைத்து அரசு, ஆதிதிராவிடர்v நலப்பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து கொரோனா பாதிப்பினால் இறந்த ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றனர்.
Tags:    

Similar News