தொழில்நுட்பம்
கேலக்ஸி இசட் ப்ளிப்

டூயல் பன்ச் ஹோல் கேமராவுடன் உருவாகும் கேலக்ஸி இசட் ப்ளிப்

Published On 2021-04-17 07:57 GMT   |   Update On 2021-04-17 07:57 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் புது மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவிலும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. தொடர்ந்து புதிய மடிக்கக்கூடிய மாடல்களை சந்தையில் அறிமுகம் செய்வதை சாம்சங் வாடிக்கையாக கொண்டுள்ளது. சந்தையில் மடிக்கக்கூடிய சாதனங்கள் பிரிவில் புது டிரெண்ட் ஆக மாற்றும் முயற்சியில் சாம்சங் ஈடுபட்டு வருகிறது.

அவ்வாறு சாம்சங் உருவாக்கி வரும் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகி உள்ளது. புது மாடலுக்கான காப்புரிமை பெற சாம்சங் சமர்பித்த ஆவணங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. காப்புரிமை ஆவணங்களின் படி சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் தோற்றத்தில் புது மாடலை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது.



இந்த மாடல் உள்புறம் மற்றும் வெளிப்புறம் மடிக்கும் வகையிலான டிசைன் கொண்டுள்ளது. இதனால் பெரிய கவர் டிஸ்ப்ளே வழங்குவதற்கான அவசியம் ஏற்படாது. கிளாம்ஷெல் டிசைன் கொண்டிருக்கும் புது மாடல் இரு திசைகளில் மடிக்க முடியும். மேலும் இது டூயல் பன்ச் ஹோல் கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், முழு டிஸ்ப்ளேவை பிளாஷ் போன்று பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.
Tags:    

Similar News