உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவையில் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

Published On 2022-05-04 11:09 GMT   |   Update On 2022-05-04 11:09 GMT
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோவை:

திருப்பூர் மாவட்டம் அவினாசி படின்கரையை சேர்ந்தவர் விஜயகுமார்  (வயது 36). இவர் தனியார் நிறுவனத்தில் துணை மேனேஜராக உள்ளார். இவர் சம்பவத்தன்று கட்டம்பட்டியில் உள்ள கம்பெனியில் ஆய்வு செய்ய வந்தார்.அங்கு ஒவ்வொறு இடமாக சென்று ஆய்வு செய்தார். அப்போது வாலிபர் ஒருவர் கம்பெனியில் இருந்த 3 கிலோ காப்பர் வயர்களை  எடுத்து உருக்கி கொண்டு இருந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் அங்கிருந்த ஊழியர்கள் வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.பின்னர் விஜயகுமார், ஊழியர்களின் உதவியுடன் அந்த வாலிபரை நெகமம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார்  விசாரணையில் அவர் மதுரைையை சேர்ந்த ஜீவானந்தம் (32) என்பதும், வேலை இல்லாததால் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை ேபரூரை அடுத்த சென்னனூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (37). விவசாயி.சம்பவத்தன்று அவர் தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த மோட்டார் பம்பு திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அருகில் இருந்தவர்கள் அதிகாலை தோட்டத்தில் இருந்து 2 பேர் சாக்கு மூட்டையில் சென்றதாக தெரிவித்தனர். பின்னர்  இதுகுறித்து கதிர்வேல் பேரூர் போலீசில் புகார் தெரிவித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தொண்டாமுத்தூரை அடுத்த தேவராயபுரம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (31) என்பவர் வடமாநில வாலிபர் ஒருவருடன் சேர்ந்து கதிர்வேல் தோட்டத்தில் புகுந்து திருடியது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய வடமாநில வாலிபர் யார் என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News