உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலை மூணாறு சாலையில் முட்செடிகளால் விபத்து அபாயம்

Published On 2022-01-08 07:23 GMT   |   Update On 2022-01-08 07:23 GMT
செடிகள் அடர்ந்துள்ளதால் வாகனங்கள் நிறுத்தியிருப்பது தெரியாமல் அவ்வழியாக வரும் பிற வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.
உடுமலை:

உடுமலை-மூணாறு சாலையில் புங்கன் ஓடை பாலம் உள்ளது. இங்கு எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு ‘எஸ்’ வளைவுடன் விபத்து பகுதியாக சாலை உள்ளது. இப்பகுதியில் பாலத்தின் இருபுறமும் வளர்ந்துள்ள முட்செடி, கொடிகள் சாலையை பெருமளவு ஆக்கிரமித்துள்ளன. 

வளைவு பகுதியில் சாலையை மறைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த முட்புதரால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. அதோடு இந்த சாலையில் வரும் சுற்றுலா பயணிகளும் விதி மீறி, பாலத்திலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு வனப்பகுதியை ரசிக்கின்றனர்.

செடிகள் அடர்ந்துள்ளதால் வாகனங்கள் நிறுத்தியிருப்பது தெரியாமல் அவ்வழியாக வரும் பிற வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. மேலும் ஒதுங்க முடியாத அளவிற்கு சாலை குறுகலாக உள்ளதால் வாகனங்களில் செல்பவர்களையும் முட்செடிகள் காயப்படுத்தி வருகிறது.

அதே போல் இந்த சாலையில் பல இடங்களில் தற்போது பெய்த பருவ மழைக்கு சாலையின் இரு புறமும் பல இடங்களில் முட்புதர்கள் காணப்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடி, கொடி உள்ளிட்ட புதர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.  
Tags:    

Similar News