செய்திகள்
ஏவுகணை சோதனை

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலினா, துருவஸ்திரா ஏவுகணைகள் சோதனை

Published On 2021-02-20 00:10 GMT   |   Update On 2021-02-20 00:10 GMT
எதிரிகளின் டாங்கிகளை தகர்க்கும் ஹெலினா, துருவஸ்திரா ஏவுகணைகள் சோதனை நேற்று நடைபெற்றது.
புதுடெல்லி:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) முற்றிலும் உள்நாட்டிலேயே ‘ஹெலினா’, ‘துருவஸ்திரா’ என்ற 2 அதிநவீன ஏவுகணைகளை தயாரித்துள்ளது. இவை எதிரிகளின் டாங்கிகளை தகர்க்கக் கூடியவை. எந்த நேரத்திலும், எந்த வானிலையிலும் செயல்படக் கூடியவை.

இந்நிலையில், ராணுவத்தின் பயன்பாட்டுக்கான ஹெலினா, விமானப்படையின் பயன்பாட்டுக்கான துருவஸ்திரா ஏவுகணைகளின் சோதனை நேற்று ஒரு பாலைவன பகுதியில் நடைபெற்றது.

அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டரில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. குறுகிய தூர இலக்கு, நீண்ட தூர இலக்கு, நிலையான இலக்கு, சுழன்று கொண்டிருக்கும் இலக்கு என எல்லா வகையிலும் ஏவுகணைகள் சோதித்துப் பார்க்கப்பட்டன.

ஆயுதங்கள் பொருத்தி, கைவிடப்பட்ட டாங்கிகள் மீது ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
Tags:    

Similar News