செய்திகள்
தக்காளி

தக்காளி விலை குறைந்தது - கிலோ ரூ.10க்கு விற்பனை

Published On 2019-09-09 07:58 GMT   |   Update On 2019-09-09 07:58 GMT
கோயம்பேடு மார்கெட்டில் வரத்து அதிகம் காரணமாக தக்காளி விலை குறைந்துள்ளது. தற்போது ரூ. 10-க்கு விற்கப்பட்டு வருகிறது.
போரூர்:

கோயம்பேடு மார்கெட்டில் தக்காளி வரத்து அதிகம் காரணமாக விலை குறைந்துள்ளது. வழக்கமாக 65 லாரிகள் வரை வந்து கொண்டிருந்த தக்காளி தற்போது 75 லாரிகள் வரை வருகிறது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 14-க்கு விற்ற நாட்டு தக்காளி தற்போது ரூ. 10-க்கு விற்கப்பட்டு வருகிறது.

இதேபோல் ரூ. 30-க்கு விற்ற வெங்காயம் தற்போது ரூ. 35-க்கும் ரூ. 150-க்கு விற்ற இஞ்சி ரூ. 200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறி மொத்த விலை விபரம் வருமாறு:-


தக்காளி - ரூ.10
பெங்களூர் தக்காளி - ரூ. 16
வெங்காயம் - ரூ.35
சி.வெங்காயம் - ரூ.45
உருளைக்கிழங்கு - ரூ. 15
கத்தரிக்காய் - ரூ. 15
பீன்ஸ் - ரூ. 60
அவரைக்காய் - ரூ. 25
கொத்தவரங்காய் - ரூ. 20
வெள்ளரிக்காய் - ரூ. 15
முட்டை கோஸ் - ரூ. 10
முருங்கைக்காய் - ரூ. 40
நூக்கல் - ரூ. 8
பீட்ரூட் - ரூ. 20
இஞ்சி - ரூ. 200

Tags:    

Similar News