செய்திகள்
சித்தராமையா

எடியூரப்பாவுக்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சித்தராமையா கேள்வி

Published On 2021-06-11 03:05 GMT   |   Update On 2021-06-11 03:05 GMT
பா.ஜனதாவில் முதல்-மந்திரி மற்றும் மேலிடம் இரண்டும் பலவீனமாக உள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று நாங்கள் யாரும் கேட்கவில்லை.
பெங்களூரு :

முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றம் செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு

பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று நாங்கள் யாரும் கேட்கவில்லை. அதுபற்றி டெல்லியில் ஆலோசனை நடைபெறுவதாக நான் கூறினேன். ஒருவேளை முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது இல்லை என்றால், அவருக்கு எதிராக கருத்துகளை கூறி வரும் எம்.எல்.ஏ.க்கள் பசனகவுடா பட்டீல் யத்னால், அரவிந்த் பெல்லத், மந்திரி சி.பி.யோகேஷ்வர் ஆகியோர் மீது பா.ஜனதா மேலிடம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?.

பா.ஜனதாவில் முதல்-மந்திரி மற்றும் மேலிடம் இரண்டும் பலவீனமாக உள்ளது. எடியூரப்பா மாற்றம் குறித்து யாரும் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார். அப்படி என்றால் மாற்றம் வேண்டும் என்று கூறியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கட்சியினருக்கு சொல்லப்படும் செய்தி என்ன.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News