செய்திகள்
ஒப்பந்தங்கள் கையொப்பமானபோது எடுத்தப் படம்

இந்தியா-வங்காளதேசம் இடையே 7 புதிய ஒப்பந்தங்கள் - எரிவாயு இறக்குமதி திட்டம் தொடக்கம்

Published On 2019-10-05 09:51 GMT   |   Update On 2019-10-05 09:51 GMT
வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா முன்னிலையில் இன்று 7 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்தியாவுக்கு எரிவாயு இறக்குமதி உள்ளிட்ட திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா முன்னிலையில் இன்று 7 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்தியாவுக்கு பெட்ரோலிய எரிவாயு இறக்குமதி செய்வது உள்ளிட்ட மூன்று திட்டங்களை பிரதமர் மோடியும் ஷேக் ஹசினாவும் தொடங்கி வைத்தனர்.



இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்குமான நல்லுறவு அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி இந்த நல்லுறவு இருநாட்டு மக்களும் பயனடையும் வகையில் அமைந்துள்ளதாக கூறினார்.

கடந்த ஓராண்டு காலத்தில் இருநாடுகளுக்கு இடையில் 9 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்று தொடங்கப்பட்ட திட்டங்களுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News