தொழில்நுட்பம்
ரியல்மி ஃபாஸ்ட் சார்ஜிங்

ரியல்மி 125 வாட் அல்ட்ராடார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் அறிமுகம்

Published On 2020-07-16 09:50 GMT   |   Update On 2020-07-16 09:50 GMT
ரியல்மி நிறுவனத்தின் 125 வாட் அல்ட்ராடார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ரியல்மி நிறுவனம் 125 அல்ட்ராடார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து உள்ளது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரியை 33 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 3 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 20 நிமிடங்கள் ஆகும்.

இத்தனை வேகத்தில் சார்ஜ் ஆகும் போதும் ஸ்மார்ட்போனின் வெப்பம் 40 டிகிரி செல்சியசில் இருக்கும் என ரியல்மி தெரவித்து உள்ளது. இதற்கென பலகட்ட பாதுகாப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

முன்னதாக ஒப்போ 125 வாட் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி தனது 125 வாட் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்பது பற்றி எந்த தகவலும் வழங்கவில்லை. 
Tags:    

Similar News