செய்திகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றிய போது எடுத்தபடம்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நட்ட கவர்னர்

Published On 2021-10-18 04:23 GMT   |   Update On 2021-10-18 04:23 GMT
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று, விக்கி மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.
ஊட்டி:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு வந்துள்ளார். அவருடன் குடும்பத்தினரும் வந்துள்ளனர். தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் தங்கி இருக்கும் கவர்னர் ஊட்டியில் உள்ள இயற்கை அழகை கண்டு ரசித்து வருகிறார்.

நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி ராஜ்பவனில் இருந்து பாதுகாப்பு வாகனங்களுடன் ஊட்டி ரெயில் நிலையத்திற்கு சென்றார். பின்னர் ஊட்டியில் இருந்து குன்னூர் சென்ற மலை ரெயிலில் தனது மனைவி லட்சுமி ரவி மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்தார். பயணத்தின்போது மலைரெயில் குகைகளை கடந்து செல்வது, அடர்ந்த வனப்பகுதிகள், பசுமையான தேயிலை தோட்டங்கள் போன்ற இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தபடியே பயணம் செய்தார்.

மீண்டும் மாலையில் ஊட்டிக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று, விக்கி மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். அவரது மனைவி லட்சுமி ரவி ருத்ராட்சை மரக்கன்றை நட்டு வைத்தார்.

அப்போது கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்பட கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News