செய்திகள்
சாக்சி மகாராஜ்

நேதாஜியைக் கொன்றது காங்கிரஸ்தான்- பாஜக எம்பி சாக்சி மகாராஜ் பகீர் குற்றச்சாட்டு

Published On 2021-01-24 09:17 GMT   |   Update On 2021-01-24 09:17 GMT
நேதாஜி சுபாஷ் சந்திர போஸை காங்கிரஸ்தான் கொலை செய்தது என்று பாஜக எம்.பி. சாக்சி மகாராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உன்னாவ்:

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மக்களவை தொகுதி பாஜக எம்பியான சாக்சி மகாராஜ், நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “எனது குற்றச்சாட்டு என்னவென்றால், காங்கிரஸ் கட்சி சுபாஷ் சந்திர போசைக் கொன்றது. மகாத்மா காந்தியோ அல்லது பண்டிட் நேருவோ அவரது புகழ் முன் நிற்க முடியாது.” என்றார்.

‘இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸ் முக்கிய பங்கு வகித்தார். அவரது மரணம் ஏன் இன்னும் ஒரு மர்மமாக இருக்கிறது? பண்டிட் நேரு ஏன் எந்த விசாரணையும் நடத்தவில்லை? நேதாஜி மரணம் குறித்த உண்மை வெளிவர வேண்டும்’ என்றும் சாக்சி மகாராஜ் வலியுறுத்தினார்.

நேதாஜியின் பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், பாஜக எம்பி கூறிய இந்த குற்றச்சாட்டு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

நேதாஜி மரணம் தொடர்பாக, காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சாக்சி மகாராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
Tags:    

Similar News