தொழில்நுட்பம்
கேலக்ஸி டேப் ஏ

எஸ் பென் வசதியுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி டேப்லெட்

Published On 2019-12-20 07:25 GMT   |   Update On 2019-12-20 07:25 GMT
சாம்சங் நிறுவனம் எஸ் பென் வசதி கொண்ட புதிய கேலக்ஸி டேப்லெட் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



சாம்சங் கேலக்ஸி சீரிசில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு, பின் டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக இந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்6 சாதனத்தை அறிமுகம் செய்தது. தற்சமயம் சாம்சங் நிறுவனம் 10-இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய டேப்லெட்டை அறிமகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தகவல்களின் படி சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் SM-P610 மற்றும் SM-P615 என இரு மாடல் நம்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் SM-P610 மாடல் நம்பர் கொண்ட சாதனம் சாம்சங் கேலக்ஸி நோட் 10.1 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.



இதேபோன்று SM-P615 மாடல் நம்பர் கொண்ட சாதனம் எல்.டி.இ. வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. புதிய கேலக்ஸி டேப் எஸ் பென் வசதி கொண்டிருக்கும் என்றும் இதில் பல்வேறு வித்தியாசமான அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்தவகையில் எஸ் பென் சாதனத்தை ஸ்கிரீன் அருகே கொண்டு சென்று எஸ் பென் பட்டனை க்ளிக் செய்தால் ஏர் கமாண்ட் பேனல் திறக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஒரு பகுதியை ஸ்மார்ட் செலக்ட் செய்து, அதனை மற்றவர்களுடன் பகிர்வது, ஸ்கிரீன்ஷாட் எடுப்பது போன்றவற்றை மேர்கொள்ள முடியும் என தெரிகிறது. 

மேலும் எஸ் பென் சாதனத்தை ஏதேனும் எழுத்தின் மீது கொண்டு சென்றால், குறிப்பிட்ட வார்த்தையை மொழி பெயர்க்கும் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. எனினும், இந்த அம்சத்தை இயக்க வைபை இணைப்பில் இருக்க வேண்டும். 

புதிய கேலக்ஸி டேப்லெட்டில் 10.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் அல்லது குவால்காம் சிப்செட், 64 ஜி.பி. அல்லது 128 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News