லைஃப்ஸ்டைல்

மூல வியாதிக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு

Published On 2019-05-27 07:11 GMT   |   Update On 2019-05-27 07:11 GMT
இந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ தகவல்கள் கூறுகின்றன. இதனை ஆங்கிலத்தில் ‘ராக் சால்ட்’ என்றும் அழைக்கிறார்கள்.

மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த ரக உப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் ‘சோடியம் குளோரைடு’ அதிக அளவில் உள்ளது.

குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டி, மலத்தை இளக்கும். சாதாரண உப்பில் இருப்பதைப் போலவே பாறை உப்பிலும் சோடியம் குளோரைடு இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.

இந்த வகை உப்பை உணவில் தினமும் உபயோகித்து வந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற வியாதிகள் நீங்கி, உடல் வலுவாகும் என்றும், மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

தைராய்டு பிரச்சினைக்கும் இந்த வகை உப்பு மருந்தாகும். பாறை உப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலி, ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும். தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். செல்களை புதுப்பிக்கும் என்பதும் மருத்துவர்கள் கூறும் தகவல்.
Tags:    

Similar News