உள்ளூர் செய்திகள்
டவுனில் உள்ள ஒரு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 276 மையங்களில் தேர்வு எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள்

Published On 2022-05-06 09:54 GMT   |   Update On 2022-05-06 09:54 GMT
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 276 மையங்களில் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர்.
நெல்லை:

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

நெல்லை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 341 மாணவர்கள், 12 ஆயிரத்து 221 மாணவிகள் என 24 ஆயிரத்து 562 பேர் தேர்வு எழுதினர். இதேபோல் மத்திய சிறைக்கைதிகள் 11 பேரும், தனித்தேர்வர்கள் 780 பேரும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 25 அயிரத்து 353 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர்.

நெல்லை மாவட்டத்தில்  அரசு பள்ளிகளில் 32 மையங்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 48 மையங்கள், மெட்ரிக் பள்ளிகளில் 11 மையங்கள், மத்திய சிறைச்சாலையில் ஒரு மையம், தனித்தேர்வர்களுக்கு 4 மையங்கள் என மொத்தம் 96 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை அலுவலர்கள், நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் என மொத்தம் 1892 பேர் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
வள்ளியம்மாள்புரம், கங்கைகொண்டான், உக்கிரன்கோட்டை, நடுக்கல்லூர், மேலப்பாளையம், கண்ணன்குளம், களக்காடு, இடிந்தகரை ஆகிய 8 மையங்களில் சிறப்பு கவனம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 322 மாணவர்கள், 10 ஆயிரத்து 9 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 331 பேர் தேர்வை எழுதினர். இதற்காக மாவட்டம் முழுவதும் 79 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க 96 நிற்கும்படை உறுப்பினர்கள், 10 சிறப்பு பறக்கும்படை உறுப்பினர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 309 பள்ளிகளில் படித்த 11 ஆயிரத்து 968 மாணவர்கள், 12 ஆயிரத்து 31 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 999 பேர் தேர்வு எழுதினர். அதற்காக 106 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள் 106 பேர், துறை அலுவலர்கள் 106 பேர், பறக்கும் படை உறுப்பினர்கள் 165 பேர், அறைகண்காணிப்பா ளர்கள் 1,p494 பேர் ஈடுபட்டிருந்தனர்.  
Tags:    

Similar News