செய்திகள்
கோப்புபடம்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2,000 பேர் பலி

Published On 2020-11-26 09:06 GMT   |   Update On 2020-11-26 09:06 GMT
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2,000 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்:

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டுகள் நெருங்கியுள்ள போதிலும் தொற்றின் வீரியம் குறைந்த பாடில்லை. 

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 கோடியே 07 லட்சத்து 45 ஆயிரத்து 874 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 27 ஆயிரத்து 215 ஆக உள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரத்து 411 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 1 கோடியே 72 லட்சத்து 68 ஆயிரத்து 248 பேர் சிகிச்சையில் உள்ளனர். உலக வல்லரசு நாடான அமெரிக்காவைப் பதம் பார்த்த கொரோனா வைரஸ் அங்கு கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அந்த நாட்டின் தினசரி புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

தற்போது அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,31,39,882 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,046 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை மொத்த உயிரிழப்பு 2,68,262 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 78,08,059 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு தற்போது 50,63,561 போ தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 24,150 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
Tags:    

Similar News