செய்திகள்
டெங்கு காய்ச்சல்

இதுவரை 500 பேர் பாதிப்பு- அதிகரிக்கும் டெங்குவை கட்டுப்படுத்த தீவிரம்

Published On 2021-11-20 05:13 GMT   |   Update On 2021-11-20 05:13 GMT
டெங்கு பரவலுக்கு அறிகுறி காய்ச்சல், குளிர், தலைவலி, வயிற்றுவலி, மூக்கு ஒழுகுதல் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவுவது வழக்கம்.

டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவுகிறது. ஆங்காங்கே தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்துதான் இந்த வகை கொசுகள் உற்பத்தியாகிறது. இவை பகலிலேயே கடிக்கும்.

தமிழகம் முழுவதும் 500 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. மேலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.



சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

டெங்கு பரவலுக்கு அறிகுறி காய்ச்சல், குளிர், தலைவலி, வயிற்றுவலி, மூக்கு ஒழுகுதல் இருக்கும்.

கொசுக்கள் மூலம் பரவுவதால் கொசுக்களை கட்டுப்படுத்த அனைத்து பகுதியிலும் கொசு மருந்து தெளிக்கப்படும்.

அனைத்து வீடுகளுக்கும் பிளீச்சிங் பவுடர் சுமார் 500 கிராம் வழங்கப்படுகிறது. குப்பை கழிவுகளை அகற்றியதும் அந்த இடங்களில் தெளிக்க வேண்டும்.

சுகாதாரத்துறையினர் குடிநீர் வழங்கல்துறையுடன் இணைந்து செயல்படவும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் கலக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

குடியிருப்பு நலச்சங்கங்களும் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தவறாமல் மருந்து தெளிக்க வேண்டும்.

சென்னையில் 200 வார்டுகளுக்கும் டெங்கு கட்டுப்படுத்தும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News