இந்தியா
அன்னா ஹசாரே

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விற்பனையில் ரூ.25 ஆயிரம் கோடி ஊழல்: அன்னா ஹசாரே

Published On 2022-01-25 02:17 GMT   |   Update On 2022-01-25 02:17 GMT
மகாராஷ்டிராவில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விற்பனையில் ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் நடத்திருப்பதாக மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடிதம் எழுதி உள்ளார்.
புனே :

மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை மந்திரி அமித்ஷாவுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மகாராஷ்டிராவில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அரசியல்வாதிகளுடன் துணையுடன் நடந்த விற்பனை பேரத்தில் ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இது குறித்து நாங்கள் மும்பையில் புகார் அளித்தோம். இந்த புகார் குறித்து விசாரிக்க டி.ஜி.பி. அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் முறைகேடு எதுவும் கண்டறியப்படவில்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா அரசு தயக்கம் காட்டினால், இதற்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பது?

விவசாயிகளின் நலனுக்காகவும், கூட்டுறவு துறையை மேம்படுத்துவதற்கும் தான் மத்திய அரசு கூட்டுறவு அமைச்சகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள சர்க்கரை ஆலைகள் விற்பனை முறைகேடு குறித்து சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து மத்திய அரசு விசாரணை நடத்தினால், அது சிறந்த முன் உதாரணமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இருப்பினும் தனது கடிதத்தில் அன்னா ஹசாரே எந்த ஒரு சர்க்கரை ஆலையின் பெயரையும் குறிப்பிடவில்லை.
Tags:    

Similar News