ஆன்மிகம்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்

ராமேசுவரம் கோவிலில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதலுடன் இன்று தொடக்கம்

Published On 2021-10-06 04:06 GMT   |   Update On 2021-10-06 04:06 GMT
ராமேசுவரம் கோவிலில் நாளை முதல் தினமும் அம்பாள் ஒவ்வொரு அவதாரத்தில் வருகின்ற 14-ந் தேதி வரையிலும் ஒன்பது நாட்களும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ராமேசுவரம் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டின் நவராத்திரி திருவிழாவானது ராமேசுவரம் கோவிலில் இன்று முதல் காப்பு கட்டுதலுடன் தொடங்குகின்றது. கோவிலில் அம்மன் சன்னதி பிரகாரத்தில் அமைக்கப்பட உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் அம்பாள் சிலை வைக்கப்பட்டு காப்பு கட்டுதல் நடைபெறுகின்றது. தொடர்ந்து நாளை முதல் அம்மன் சன்னதி பிரகாரத்தில் கொலு மண்டபத்தில் ஏராளமான கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்படும்.

நவராத்திரி திருவிழா இன்று(புதன்கிழமை) முதல் தொடங்குவதை முன்னிட்டு நாளை முதல் இரவு 7 மணி அளவில் தினமும் அம்பாள் ஒவ்வொரு அவதாரத்தில் வருகின்ற 14-ந் தேதி வரையிலும் ஒன்பது நாட்களும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி சாமி அம்பாள் அம்பு எய்தல் நிகழ்ச்சியானது கோவிலின் உள்ளேயே நடைபெறுகின்றது. வழக்கமாக நவராத்திரி திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியான சாமி அம்பாள் அம்பு எய்தல் நிகழ்ச்சியானது ராமேஸ்வரம் கோவிலோடு சேர்ந்த உபகோவிலான பத்திரகாளியம்மன் கோவில் அருகே வைத்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமை இந்த 3 நாட்களை தவிர்த்து வழக்கம்போல் மற்ற நாட்களில் மட்டும் பக்தர்கள் கொலு மண்டபத்தில் நடைபெறும் அம்பாள் பூஜைகளை காண அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.
Tags:    

Similar News