செய்திகள்
உதவி மையங்கள்

கொரோனா நோயாளிகளுக்காக திருப்பூர் மாவட்டத்தில் 16 இடங்களில் உதவி மையங்கள்

Published On 2021-04-30 10:22 GMT   |   Update On 2021-04-30 10:22 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றாளர்களுக்கு சிகிச்சைக்கு வழிகாட்டும் வகையில் 16 இடங்களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் 16 இடங்களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றாளர்களுக்கு சிகிச்சைக்கு வழிகாட்டும் வகையில் 16 இடங்களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், திருப்பூர் மாநகர பகுதிகளில் 3, ஊரகப் பகுதிகளில் 13 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த உதவி மையங்களில் நோய்த் தொற்று உறுதியானவர்களின் நிலையை பரிசோதனை செய்து அவர்களது நிலைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் அல்லது அவர்களது விருப்பத்தின்பேரில் கொரோனா சிறப்பு சித்த வைத்திய மையத்துக்கோ அனுப்பி வைக்கப்படுவார்கள். எனவே, கொரோனா சளி பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அரசு மருத்துவனைக்கு செல்லாமல் அருகில் உள்ள உதவி மையங்களுக்கு காலை 9 முதல் 5 மணிக்குள் பரிசோதனை முடிவுகளுடன் சென்று உரிய வழிகாட்டுதலுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

திருப்பூர் மாநகரில் உதவி மையங்கள்:-

திருப்பூர் மாநகரில் ஜெய்வாபாய் அரசு மேல்நிலைப் பள்ளி (8072936742), பெருமாநல்லூர் சிலை மேட்டுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி (6379018626), சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி (7373325692).ஊரகப் பகுதிகளில் உதவி மையங்கள்:

அவிநாசி வட்டத்தில் சேவூர் ஆரம்ப சுகாதார நிலையம் (6369463608), திருப்பூர் வட்டத்தில் பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் (9994063487), பல்லடம் வட்டத்தில் செம்மிபாளையம் ஆரம்ப சுகாதர நிலையம்(8778299140), பொங்கலூர் வட்டத்தில் பொங்கலூர் ஆரம்ப சுகாதார நிலையம் (9095199423), குடிமங்கலம் வட்டத்தில் குடிமங்கலம் ஆரம்ப சுகாராத நிலையம் (9790223004), உடுமலை வட்டத்தில் எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் (979223004), மடத்துக்குளம் வட்டத்தில் கொமரலிங்கம் ஆரம்ப சுகாதார நிலையம் (9629938013),

தாராபுரம் வட்டத்தில் பொன்னாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் (9842963850), மூலனூர் வட்டத்தில் மூலனூர் ஆரம்ப சுகாதார நிலையம் (9443160225), குண்டடம் வட்டத்தில் தாயம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் (9442221200), காங்கயம் வட்டத்தில் நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையம் (9443342012), ஊத்துக்குளி வட்டத்தில் குன்னத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் (9629323231), வெள்ளக்கோவில் வட்டத்தில் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையம் (9486670999) ஆகிய உதவி மையங்களை அடைப்புக் குறிகளுக்குள் உள்ள செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 25 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News