செய்திகள்
ணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கிய போது எடுத்த படம்.

மாவட்டத்தில் கருணை அடிப்படையில் 4 பேருக்கு பணி நியமன ஆணைகள் - கலெக்டர் வழங்கினார்

Published On 2021-06-08 17:51 GMT   |   Update On 2021-06-08 17:51 GMT
பணி காலத்தில் இறந்த சுப்பிரமணியின் மனைவி வள்ளிக்கு கருணை அடிப்படையில் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அலகில் பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த சண்முகம் கடந்த 25.3.2020 அன்று மரணம் அடைந்தார். அவரது மகன் விமல்ராஜ் என்பவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் வளர்ச்சி பிரிவில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து மரணம் அடைந்த தீர்த்தகிரி என்பவரின் மகன் சீனிவாசன் என்பவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் கிருஷ்ணகிரி உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது.

வேப்பனப்பள்ளி ஒன்றியம் பில்லனகுப்பம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து பணி காலத்தில் இறந்த சுப்பிரமணியின் மனைவி வள்ளிக்கு கருணை அடிப்படையில் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல கலெக்டர் அலுவலக சத்துணவு பிரிவில் டிரைவராக பணியாற்றிய ராஜேந்திரன் பணி காலத்தில் இறந்தார். இதையொட்டி அவரது மகன் ரோகேஷ் கணபதிக்கு வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் 4 பேருக்கும் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார். அப்போது பணி காலத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அவர்களுக்குஅறிவுரை வழங்கினார்.
Tags:    

Similar News