செய்திகள்
உத்தவ் தாக்கரே

கொரோனா வைரஸ் இன்னும் தலைக்கு மேல் கத்தியாக உள்ளது: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

Published On 2021-08-20 01:58 GMT   |   Update On 2021-08-20 01:58 GMT
கொரோனா தொற்று அபாயம் இன்னும் சென்றுவிடவில்லை. உயிரிழப்புகளை தடுக்க கொரோனா சிகிச்சை மையங்களுடன் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களும் அமைக்கப்படுவது நல்ல விஷயமாகும்.
மும்பை :

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று பால்கர் மாவட்ட நிர்வாக அலுவலக கட்டிடம், வசாய் விராரில் மாநகராட்சி, அரசு சுகாதார மையத்தை திறந்து வைத்தார். மெய்நிகரில் முறையில் நடந்த கட்டிட திறப்பு விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

கொரோனா வைரஸ் இன்னும் நமது தலைக்கு மேல் கத்தியாக தொங்கி கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்று அபாயம் இன்னும் சென்றுவிடவில்லை. உயிரிழப்புகளை தடுக்க கொரோனா சிகிச்சை மையங்களுடன் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களும் அமைக்கப்படுவது நல்ல விஷயமாகும்.

பால்கர் மாநிலத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் வித்தியாசமானது. இங்கு வனப்பகுதி, கடற்கரை, நிறைந்த பழங்குடியின கலாசாரம், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. எனினும் மும்பைக்கு அருகில் இருப்பதால் பால்கர் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. ஆனால் எதிர்காலத்தில் அது நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே, தாதா புசே, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News