உள்ளூர் செய்திகள்
.

உரக்கட்டுப்பாடு விதிகளை மீறிய கடைகளுக்கு விற்பனைக்கு தடை

Published On 2022-05-07 09:51 GMT   |   Update On 2022-05-07 09:51 GMT
தருமபுரி மாவட்டத்தில் உரக்கட்டுப்பாடு விதிகளை மீறிய கடைகளுக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி,

உரக்கட்டுப்பாடு விதிகளை மீறி உரம் பெற்ற தனியார் உரகடையில் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் தனியார் மற்றும் வேளாண் கூட்டுறவு சங்க கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் நல்லம்பள்ளி வட்டாரத்தில் வேளாண் உதவி இயக்குனர் தாம்சன், மற்றும் நல்லம்பள்ளி வேளாண்மை உதவி இயக்குனர் இளங்கோவன்ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

 இவர்கள் கடையில் உரை இருப்பு மற்றும் கடைமுன் முறையான விலைப்பட்டியல் தகவல் பலகை வைத்து பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி உரம் பெற்ற ஒரு தனியார் உரக்கடையில் விற்பனையை அவர்கள் தடை  செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் யூரியா 1300 டன், டிஏபி 878 பொட்டாஷ் 542 டன், காம்ப்ளக்ஸ் 1557 டன், எஸ்.எஸ்‌ .பி 317 டன், உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு சங்க உரக்கடைகளில் இருப்பு உள்ளது. 

இதை விவசாயிகள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News