ஆன்மிகம்
சனி பகவான்

சனி கிரகம் பற்றி அறிந்து கொள்ளலாம்...

Published On 2019-09-21 06:13 GMT   |   Update On 2019-09-21 06:13 GMT
சனி ஒளியற்ற கிரகம் என்பதால், தன்னுடன் இணைந்த கிரகத்தின் ஒளிக்கு ஏற்ப நன்மை, தீமைகள் இருக்கும். சனி கிரகத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மனிதர்களின் அனைத்து கர்ம வினைகளும், சனி கிரகத்தில்தான் பதிவாகி இருக்கும். இவர் கர்ம வினையை நிகழ்த்த உதவி செய்பவர்களாகவும், சனியின் பிரதிநிதிகளாகவும் ராகுவும், கேதுவும் செயல்படுகிறார்கள்.

நிறம் - கறுப்பு

குணம் - குரூரன்

மலர் - கருங்குவளை

ரத்தினம் - நீலக்கல்

சமித்து - வன்னி

தேவதை - எமன்

பிரத்யதி தேவதை - பிரஜாபதி

திசை - மேற்கு

ஆசன வடிவம் - வில்

வாகனம் - காகம்

தானியம் - எள்

உலோகம் - இரும்பு

சுவை - கசப்பு

பிணி - வாதம்

ராகம் - யதுகுலகாம்

நட்பு - புதன், சுக்ரன், ராகு, கேது

பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்

சமம் - வியாழன்

ஆட்சி - மகரம், கும்பம்

மூலத்திரிகோணம் - கும்பம்

உச்சம் - துலாம்

நீச்சம் - மேஷம்

நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி

திசா காலம் - 19 வருடங்கள் பார்வை - 3, 7, 10-ம் இடங்கள்

பாலினம் - அலி

கோசார காலம் - 2½ வருடம்

உருவம் - குள்ளம்

உபகிரகம் - குளிகன்

ஸ்தலம் - திருநள்ளாறு

Tags:    

Similar News