செய்திகள்
இந்திய அணி கேப்டன் விராட் கோலி

எதிரணிக்கு அதிக முறை பாலோ-ஆன் கொடுத்த இந்திய கேப்டன்: விராட் கோலி சாதனை

Published On 2019-10-21 09:51 GMT   |   Update On 2019-10-21 09:51 GMT
ராஞ்சி டெஸ்ட் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவை குறைந்த ரன்னில் சுருட்டி பாலோ-ஆன் கொடுத்ததன் மூலம் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்ய விரும்பாமல் தென்ஆப்பிரிக்காவை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய பணித்தது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதன்மூலம் 8-வது முறையாக எதிரணியை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய பணித்தது. இதனால் அதிக முறை பாலோ-ஆன் கொடுத்த இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முகமது அசாருதீன் 7 முறையும், எம்எஸ் டோனி 5 முறையும், கங்குலி நான்கு முறையும் பாலோ-ஆன் கொடுத்துள்ளனர்.

1993-94-ல் இலங்கைக்கு எதிரான தொடரில் இரண்டு முறை (லக்னோ மற்றும் பெங்களூரு) பாலோ-ஆன் கொடுத்தது. அதன்பின் தற்போதுதான் இரண்டு முறை பாலோ-ஆன் கொடுத்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 8-வது முறையாக பாலோ-ஆன் கொடுத்த நிலையில், 7 முறை வெற்றியும், இரண்டு முறை டிராவும் கண்டுள்ளது. பாலே-ஆன் கொடுக்காமல் இந்தியா பேட்டிங் செய்த 7 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
Tags:    

Similar News