ஆன்மிகம்
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

Published On 2020-08-14 08:32 GMT   |   Update On 2020-08-14 08:32 GMT
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் எளிமையாக கொடியேற்று விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் நேற்று மிகவும் எளிமையாக கொடியேற்று விழா நடைபெற்றது.

பக்தர்கள் அனுமதி இன்றி கோவிலில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டு கோவில் டிரஸ்டிகள் குருவிக்கொண்டான்பட்டி பழனியப்பன் என்ற செந்தில் செட்டியார், காரைக்குடி மெய்யப்ப செட்டியார் ஆகியோர் முன்னிலையில் கொடியேற்று விழா நடைபெற்றது.

தினமும் சுவாமி அலங்காரம் மட்டும் நடைபெற்று கோவிலின் உள் பிரகாரங்களில் விழா நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தியான வருகிற 22-ந்தேதி அன்று பக்தர்கள் அனுமதி இன்றி கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. விழாவையொட்டி தினந்தோறும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த தகவலை கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.
Tags:    

Similar News