செய்திகள்
ராகுல் காந்தி

தனிநபர் வருவாயில் வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது-ராகுல் காந்தி விமர்சனம்

Published On 2020-10-14 11:10 GMT   |   Update On 2020-10-14 11:10 GMT
தனிநபர் வருவாயில் வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம், இந்தியாவுக்கு நெருக்கமாக  வந்துவிட்டது என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளதை   மேற்கோள் காட்டியுள்ள ராகுல் காந்தி, பாஜக அரசை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-  பாஜகவின் வெறுப்பு நிரம்பிய கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டு அருமையான சாதனை. வங்கதேசம் இந்தியாவை முந்தப் போகிறது”  என்று தெரிவித்துள்ளார்.

ஐஎம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி அறிக்கை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை  முந்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2021- மார்ச் நிதியாண்டில், இந்தியாவின் தனிநபர் வருமானம் 1,877 (டாலர் மதிப்பில்) ஆக இருக்கும் எனவும் வங்காள தேசத்தில் இதே கால கட்டத்தில் தனிநபர் வருமானம் 1,888 டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News