செய்திகள்
கோப்புபடம்

பூங்கா, நடைபயிற்சி தளம்-மண்ணரை குளத்தில் விரைவில் மேம்பாட்டு பணிகள்

Published On 2021-09-27 07:03 GMT   |   Update On 2021-09-27 11:22 GMT
தற்போது குளத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள மண்ணரை குளம்மோ நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் அணைக்காடு பகுதியில் இருந்து இக்குளத்துக்கு நீர் வரத்து உள்ளது. 

ஏறத்தாழ 30 ஏக்கர் பரப்பளவு உள்ள இக்குளம் ஆகாய தாமரை, மண் மேடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு நீர் தேங்க வழியின்றி காணப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில் நொய்யல் மேம்பாட்டு திட்டத்தில் இக்குளத்துக்கு செல்லும் வாய்க்கால் புதிதாக அமைக்கப்பட்டது.

இதன் மூலம் தற்போது குளத்துக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் வேர்கள் அமைப்பு சார்பில் இக்குளம் சீரமைப்பு செய்து நீர் நிரப்பும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது குளத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இந்த குளத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேம்பாடு செய்து பராமரிக்க வேண்டும் என வேர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து அங்கு ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிக்கை தர உத்தரவிட்டார்.

இதையடுத்து குளத்தில் பூங்கா அமைத்தல், குளம் நடுவில் பாலம் அமைத்தல், நடைப்பயிற்சி தளம், பார்வையாளர் இருக்கை, சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியன அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அரசின் அனுமதிக்காக இந்த அறிக்கை அனுப்பப்பட உள்ளது.
Tags:    

Similar News