ஆன்மிகம்
சிவன் வழிபாடு

பேரின்பம் தந்து சிவகரணமாய் ஆனந்திப்பவனே...

Published On 2021-09-02 01:35 GMT   |   Update On 2021-09-02 01:35 GMT
திருமந்திரம் என்னும் நூல், பக்தி, நீதி, தத்துவம், உளவியல், ஊழியியல், வாழ்வியல், துறவறம், வானசாஸ்திரம் என பல துறைகளை இணைந்து மனிதனுக்கு நன்னெறிகளை சொல்லும் ஒரே நூலாக இருக்கிறது.
மனிதனுக்கு இறைவன் சொன்னது, கீதை. மனிதன் இறைவனுக்கு பாடியது திருமுறைகள். மனிதனே மனிதனுக்கு தந்தது திருக்குறள். மனிதனுக்கு சித்தர் அருளியது திருமந்திரம்.

ஒரு நூல் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லும். சில நூல்கள் பக்தியை உரைக்கும். சில நூல்கள் நீதியை போதிக்கும். சில தத்துவம் பேசும். சில உளவியலைச் சொல்லும். சில வாழ்வியலை கற்பிக்கும். ஆனால் திருமந்திரம் என்னும் நூல், பக்தி, நீதி, தத்துவம், உளவியல், ஊழியியல், வாழ்வியல், துறவறம், வானசாஸ்திரம் என பல துறைகளை இணைந்து மனிதனுக்கு நன்னெறிகளை சொல்லும் ஒரே நூலாக இருக்கிறது.

அந்த நூலில் இருந்து ஒரு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்.

பாடல்:-

அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே

அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு

அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கி சிவமாய்

அகம் புகுந்தான் நந்தி ஆனந்தியாமே.

பொருள்:-

இறைவன் எளியவர்களின் உள்ளத்தில் நுழைகிறான். அப்படி இறைவன் நுழைந்தாலும், அவன் அருளைப் பெறாதவர்கள், அவனை உணரமாட்டார்கள். நந்தியின் அதிபராக விளங்கும் சிவ வடிவைக் கொண்ட அந்தப் பெருமான், உள்ளத்தில் புகுந்து பேரின்பம் தந்து சிவகரணமாய் ஆனந்திப்பவன்.
Tags:    

Similar News