செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்- சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Published On 2021-05-30 10:34 GMT   |   Update On 2021-05-30 10:34 GMT
கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். தாய்ப்பால் ‌ஊட்டும் தாய்மார்களும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்.

புதுச்சேரி:

புதுவை அரசு சுகாதாரத்துறை 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முயற்சியில் உள்ளது.

இதற்கான முயற்சியாக பல்வேறு முகாம்கள் அமைத்து 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. அதனைத்தொடர்ந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் தவிர 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட இணையதளத்தில் முன்பதிவு தொடங்கி உள்ளது.

இதற்கு மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். இளம் வயதினர் ஆர்வத்துடன் தாமாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக்கொண்ட வண்ணம் உள்ளனர். இதய நோய் உள்ளவர்கள் அதற்கான சிகிச்சை எடுத்து கொள்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, ஆஸ்துமா, பக்கவாதம், சிறுநீரகம், கல்லீரல், டயாலிசிஸ், புற்று நோய், எச்.ஐ.வி., தல சீமியா, தசைநார் தேய்வு, மனநலம் குன்றியோர், மாற்றுதிறனாளிகள் ஆகியோர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை உள்ளது.

அவர்கள் எந்தவித தயக்கமும் பயமும் இன்றி அவர்களுக்கான முன்னுரிமையுடன் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். தாய்ப்பால் ‌ஊட்டும் தாய்மார்களும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தகவலை சுகாதாரத்துறை செயலாளர் அருண் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News