தொழில்நுட்பச் செய்திகள்
மோஜ், டக்காடக்

ஷேர்சாட்டின் மோஜ் உடன் இணைந்த எம்.எக்ஸ். ‘டக்காடக்’

Published On 2022-02-11 11:37 GMT   |   Update On 2022-02-11 11:37 GMT
ஷேர் சாட்டின் மோஜ் பிளபாட்பாரத்துடன் டக்காடக் இணைக்கப்பட்டுள்ளதால், வீடியோ உருவாக்குபவர்களின் எண்ணிக்கை 10 கோடியாக உயருகிறது.
பெரியவர்கள் முதல் சிறியவர்களை வரை குட்டி குட்டி வீடியோக்கள் மூலம் அடிமைப்படுத்தி வைத்திருந்தது டிக்டாக் செயலி. பயனர்கள் தங்களது வீடியோக்களை இதில் பதிவு செய்யலாம். அது கோடான கோடி ‘டிக்டாக்’ பயனர்களுக்கு சென்றடையும். செல்போனில் ‘டிக்டாக்’ ஒரு புரட்சியே செய்தது எனலாம்.

ஆனால், டிக்டாக் செயலியை பயனர்கள் தவறாக கையாளத் தொடங்கினர். முகம் சுழிக்கும் வகையிலான வீடியோக்களை பதிவிட்டனர். இதனால் குடும்ப வன்முறை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ‘டிக்டாக்’ சந்தித்தது. பின்னர் சீன செயலியான டிக்டாக் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது.

‘டிக்டாக்’ தடையை பயன்படுத்தி எம்.எக்ஸ். டக்காடாக் என்ற செயலியையும, ஷேர்சாட் செயலி மோஜ் என்ற குட்டி வீடியோ பதிவு செய்யும் பிளாட்பாரத்தையும் கடந்த 2020 ஜூலை மாதம் தொடங்கியது.

இதில் மோஜ் பிளாட்பார்ம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனது. இந்தநிலையில் பிரபலமான மோஜ் உடன் டக்காடாக் இணைக்கப்பட்டுள்ளது. இதை ஷேர்சாட் கட்டுப்படுத்தும் இரண்டு செயலியின் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் வீடியோ உருவாக்குபவர்களின் எண்ணிக்கை  100 மில்லியன், மாதந்தோறும் செயல்பாட்டில் இருக்கும் பயனர்களின் எண்ணிக்கை 30 மில்லியன் அளவில் இருக்கும் என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளது. மாதந்தோறும் சுமார் 250 பில்லியன் முறை வீடியோக்கள் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News