செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 327 ரன்கள் குவித்த அயர்லாந்து: ஆனால் பயனில்லை

Published On 2019-05-12 09:27 GMT   |   Update On 2019-05-12 09:27 GMT
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அயர்லாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்த போதிலும், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அயர்லாந்து, வெஸட் இண்டீஸ் மற்றும் வங்காள தேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

முதலில் அயர்லாந்து பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் 77 ரன்கள் குவித்தார். 3-வது வீரராக களம் இறங்கிய ஆண்ட்ரூ பால்பிர்னி அபாரமாக விளையாடி 124 பந்தில் 135 ரன்கள் குவித்தார். கெவின் ஓ'பிரைன் 40 பந்தில் 63 ரன்கள் குவிக்க அயர்லாந்து 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்க 327 ரன்கள் குவித்தது.



பின்னர் 328 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷாய் ஹோப் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் சுனில் அம்ப்ரிஸ் அபாரமாக விளையாடி 126 பந்தில் 148 ரன்கள் குவித்தார்.

ராஸ்டன் சேஸ் 46 ரன்களும், ஜோனாதன் கார்ட்டர் 43 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 36 ரன்களும் அடிக்க 47.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை 327 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் சேஸிங் செய்தது. முதன்முறையாக சேஸிங் செய்து தோல்வியில் இருந்து தப்பியது.
Tags:    

Similar News