தொழில்நுட்பச் செய்திகள்
ஆண்ட்ராய்டு 13

கூகுள் வெளியிட்டுள்ள ஆண்ட்ராய்டு 13- என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?

Published On 2022-03-18 06:04 GMT   |   Update On 2022-03-18 06:04 GMT
இந்த ஆண்ட்ராய்டு 13 டெவலப்பர் அப்டேட் பிக்சல் 4 மற்றும் பிற பிக்ஸல் போன்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் கடைசி ஆண்ட்ராய்டு 13 டெவலப்பர் பிரீவ்வை வெளியிட்டுள்ளது. இதில் ஏராளமான புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டில் உள்ள ‘டு நாட் டிஸ்டர்ப் மோட்’ பிரையாரிட்டி மோட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் தரப்பட்டுள்ள நோட்டிஃபிகேஷன் பர்மிஷன் எந்தெந்த செயலியின் நோட்டிபிகேஷனகள் வர வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகிறது.

குயிக் செட்டிங்க்ஸில் புதிய பிரைவசி ஷார்ட்கட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேமரா, மைக்ரோபோன், லோகேஷன் ஆகியவற்றின் பிரைவசியை எளிதாக மாற்றிகொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டு 13-ல் கொடுக்கப்பட்டுள்ள புதிய மீடியா பிளேயர், அவுட்புட் பிக்கர் சிறப்பான டிசைனில் வந்துள்ளன. இதன் யூ.ஐ மூலம் எளிதாக இசை மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை கட்டுப்படுத்த முடியும்.



ஆண்ட்ராய்டு 12எல்-ல் நீகப்பட்ட டச் இண்டிகேட்டர்கள் ஆண்ட்ராய்டு 13-ல் மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்  நாம் ஸ்க்ரீன் ரெக்கார்ட் செய்யும்போதே டச்சை எனாபிள் செய்ய முடியும்.

கூகுள் டிஸ்பிளே மற்றும் ஃபாண்ட் சைஸ் ஆப்ஷன் இரண்டையும் ஒரே மெனுவின் கீழ் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் நாம் சாதனத்தின் டிஸ்பிளே சைஸை மாற்றிக்கொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டு 12எல்-ல் இருந்த ஸ்பிலிட் ஸ்க்ரீன் அம்சம் ஆண்ட்ராய்டு 13-க்கும் தரப்பட்டுள்ளது.

இந்த ஆண்ட்ராய்டு 13 டெவலப்பர் அப்டேட் பிக்சல் 4 மற்றும் பிற பிக்ஸல் போன்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News