செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவால் பெற்றோரை இழந்த 12 குழந்தைகள்

Published On 2021-06-15 11:50 GMT   |   Update On 2021-06-15 11:50 GMT
18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் யாரேனும் கொரோனாவுக்கு தங்களது பெற்றோர் மற்றும் தாய் அல்லது தந்தையை பறி கொடுத்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தெரியப்படுத்தலாம்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 1,255 பேர் பலியாகி உள்ளனர். இதில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதற்காக அந்த குழந்தைகள் பற்றிய விவரங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் நடந்து வருகிறது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 குழந்தைகள் கொரோனாவுக்கு தனது தாய், தந்தை ஆகிய இருவரையும் பறிகொடுத்துள்ளனர். 139 குழந்தைகள் தாய் அல்லது தந்தையில் யாரேனும் ஒருவரை இழந்துள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகிறது. கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைக்கு ரூ.5 லட்சமும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைக்கு ரூ.3 லட்சமும் அரசால் வழங்கப்படுகிறது.

மேலும் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் யாரேனும் கொரோனாவுக்கு தங்களது பெற்றோர் மற்றும் தாய் அல்லது தந்தையை பறி கொடுத்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தெரியப்படுத்தலாம். அவர்களுக்கு அரசு நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News