உள்ளூர் செய்திகள்
சித்ரா பவுர்ணமி பூஜை நடைபெற்ற போது எடுத்தப்படம்.

சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் சித்ரா பவுர்ணமி பூஜை வழிபாடு

Published On 2022-04-17 07:31 GMT   |   Update On 2022-04-17 07:31 GMT
சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிவகிரி:

சிவகிரி, வாசுதேவநல்லூர், ராயகிரி, தென்மலை சுற்றுவட்டார பகுதிகளில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு குலதெய்வம், காவல் தெய்வம் காளியம்மன், மாரியம்மன், கருப்பசாமி, சங்கிலிபூதத்தான், அய்யனார் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் நள்ளிரவு வழிபாடு நடை-பெற்றது.

சிவகிரி அழுக்கு சித்தர் சுவாமிகள் பீடத்தில் சிறப்பு அலங்-காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், தேன், இளநீர் மற்றும் 18 வகையான நறுமணப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

பூஜைக்கான ஏற்பாடுகளை பூசாரி குமார், கருப்பாயி, வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர். சிவனடியார்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனைபோன்று கருணையானந்த சித்தர் ஜீவசமாதுவில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

பூஜைக்கான ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்பத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News