ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்

இணையத்தில் வெளியான கிராண்ட் ஐ10 நியோஸ் கார்ப்பரேட் எடிஷன் விவரங்கள்

Published On 2020-09-12 10:54 GMT   |   Update On 2020-09-12 10:54 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்ப்பரேட் எடிஷன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் கார்ப்பரேட் எடிஷன் பெயரில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய கார் மேக்னா ட்ரிம் சார்ந்து உருவாகி இருககிறது. இது பெட்ரோல் மற்றும் டீசல் பவர் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 15 இன்ச் கன்மெட்டல் ஸ்டைல் அலாய் வீல்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6.8 இன்ச் தொடுதிரை டிஸ்ப்ளே, ஏர் பியூரிஃபையர் மற்றும் கார்ப்பரேட் எடிஷன் சின்னம் வழங்கப்படுகிறது.



இவை ஏற்கனவே மேக்னா வேரியண்ட்டில் கிடைக்கும் அம்சங்களுடன் வழங்கப்படுகிறது. இந்த கார் 1.2 லிட்டர் யூனிட் என்ஜின்களுடன் வழங்கப்படுகிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், மஹிந்திரா கேயுவி100 என்எக்ஸ்டி மற்றும் டாடா டிகோர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News