உள்ளூர் செய்திகள்
திருநாவுக்கரசர்

கவர்னர் அளித்த விருந்தை தமிழக அரசு-கூட்டணி கட்சியினர் புறக்கணித்தது சரியான முடிவு- திருநாவுக்கரசர்

Published On 2022-04-16 09:29 GMT   |   Update On 2022-04-16 09:29 GMT
5 மாநில தேர்தல் முடிந்த பின்பு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
விழுப்புரம்:

தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. விழுப்புரம் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக கவர்னர் அளித்த விருந்தை தமிழக அரசு உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் புறக்கணித்தது சரியான முடிவு. ஏனென்றால் நீட் தேர்வு மசோதாவை 2-வது முறையாக தமிழக சட்டமன்றம் அனுப்பியும் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராக செயல்பட்டு வரும் கவர்னர் விருந்து அளிக்கிறார் என்றால் அந்த விருந்தில் எப்படி பங்கேற்க முடியும்.

பாரதியார் சிலை திறப்பு விழாவை புறக்கணித்து விட்டதாக கூறும் அண்ணாமலைக்கு பாரதிதாசன் பாரதியார் பற்றிய வரலாறு என்ன தெரியும். அனுபவமில்லாத அண்ணாமலை பேசி வருகிறார். அவரின் கருத்து ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. 5 மாநில தேர்தல் முடிந்த பின்பு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பிரதமருக்கு எப்போதெல்லாம் பணம் தேவையோ அப்போதெல்லாம் விலையை ஏற்றி கொள்ளை அடிக்கின்றனர். மக்களின் பாக்கெட்டில் பணத்தை தினந்தோறும் கொள்ளையடித்து வருகின்றனர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை மோடி மாற்றி கொள்வதில்லை. மக்கள் அவரை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News