உள்ளூர் செய்திகள்
கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ.,

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமாருக்கு கொரோனா

Published On 2022-01-11 09:33 GMT   |   Update On 2022-01-11 09:33 GMT
கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ.,திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர்:

திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் (வயது 65). இவர் திருப்பூர் பெரியார்காலனி ஜே.எஸ்.கார்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. 

இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News