லைஃப்ஸ்டைல்
குழந்தையின் நாக்கை சுத்தம் செய்வது எப்படி?

குழந்தையின் நாக்கை சுத்தம் செய்வது எப்படி?

Published On 2020-12-25 04:11 GMT   |   Update On 2020-12-25 04:11 GMT
தாய்ப்பால், புட்டி பால் குடிக்கும் குழந்தைகளின் நாக்கில் வெள்ளையாக மாவுப் போல படியும். நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் கிருமிகளின் பாதிப்பு இருக்கும்.
குழந்தையின் ஒவ்வொரு உறுப்பையும் சுத்தம் செய்வது அவசியம். ஆனால், அனைத்து உறுப்புகளையும் சாதாரணமான முறையில் சுத்தம் செய்ய முடியாது. சில கவன முறைகள் அவசியமாகிறது. சில உறுப்புகளை மிதமான, கவனமான முறையில் கையாள்வதே நல்லது. அந்த வகையில் நாக்கு மற்றும் காதுகளை எவ்வாறு சுத்தம் செய்வது என இப்பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகப் பற்கள், ஈறுகளை சுத்தம் செய்ய கவனம் செலுத்துவோமே தவிர நாக்கை விட்டு விடுவோம். தாய்ப்பால், புட்டி பால் குடிக்கும் குழந்தைகளின் நாக்கில் வெள்ளையாக மாவுப் போல படியும். குழந்தை சிரிக்கும்போது நாக்கை சுத்தம் செய்ய முயற்சித்தால்,
குழந்தை
முகத்தைத் திருப்பிக்கொள்ளும். தாங்களாக வலுகட்டாயமாக நாக்கை சுத்தம் செய்ய முயற்சித்தாலும் குழந்தை காண்பிக்காது.ஆனால், நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் கிருமிகளின் பாதிப்பு இருக்கும்.

நாக்கை சுத்தம் செய்ய டிப்ஸ்

சுத்தமான, சாஃப்டான துண்டை எடுத்துக்கொள்ளுங்கள். இளஞ்சூடான தண்ணீரில் துண்டை நனைத்துக் கொள்ளுங்கள். நனைத்த துண்டை, உங்கள் விரலில் சுற்றி குழந்தையின் நாக்கை சுத்தப்படுத்துங்கள். தண்ணீர் மிகவும் சூடாக இருக்க கூடாது. எப்போதும் குழந்தையின் நாக்கை சுத்தம் செய்ய எளிமையான வழி, குழந்தையின் கீழ் உதடை கீழ் நோக்கி ஹோல்ட் செய்த பின் நாக்கை சுத்தப்படுத்துங்கள்.

சில குழந்தைகளுக்கு நாக்கில் மாவு போல மிக அழுத்தமாக ஒட்டி இருக்கும். அதை எடுக்க, இளஞ்சூடான நீரில் சிறிதளவு கல்லுப்பு போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தண்ணீரில் துண்டை நனைத்து குழந்தையின் நாக்கை சுத்தம் செய்யலாம். அழுத்தமான மாவு போல ஒட்டியிருப்பதும் நீங்கும். கவனம். குழந்தையின் நாக்கு மிகவும் மென்மையானது என்பதால் மிதமான அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்யுங்கள். பால், உணவு சாப்பிட்ட பிறகு குழந்தையின் கன்னம், வாய், பற்கள், ஈறுகள், நாக்கு ஆகியவை சுத்தம் செய்யலாம்.

Tags:    

Similar News