உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்

Published On 2022-01-12 10:35 GMT   |   Update On 2022-01-12 10:35 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக்க அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில்:

அமைச்சர் மனோதங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்ப தாவது:-

குமரி மாவட்டத்தை பசுமை எழில் கொஞ்சும் மாவட்டமாக மீட்டெடுப் பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த லின்படி பல்வேறு பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒருமுறை மட் டும் பயன்படுத்திவிட்டு கழிவாக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் அறிவியல் ரீதியாக சுற்றுச் சூழலுக்கும், இயற்கை எழிலுக்கும், உடல் நலத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்க கூடியது.

அத்தகைய  நெகிழியின் (பிளாஸ்டிக்) பயன்பாட் டினை  அறவே ஒழித்து இந்த மாவட்டத்தை நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றிட  பலதரப்பட்ட முன்னெடுப்புகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது பிளாஸ்டிக் கின் தீமைகள் குறித்த விழிப் புணர்வு பொதுமக்களிடையே  பெருமளவில் அதிகரித் துள்ளது. இந்த நிலையில் நமது குமரி மண்ணில் இத்தகைய பிளாஸ்டிக்கின் பயன்பாட்டினை அறவே ஒழித்திட பொதுமக்கள் அனைவரும் கரங்கோர்த்து செயல்பட வேண்டிய நேரமிது. பிளாஸ்டிக் பயன் பாட்டில்லாத மாவட் டத்தினை அறிவித்திட நாளை (வியாழக்கிழமை முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத் தப்பட இருக்கிறது.

வருகிற 31-ந் தேதிக்குள்  குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உணவகங்கள் மற்றும் அங்காடிகளில் பொருட்கள் வாங்க செல்லும் போது கட்டாயமாக முதல்- அமைச்சர் அறிவுறுத்தியுள்ள  மஞ்சப்பையை பயன்படுத் துங்கள். 100 சதவீதம் நெகிழி (பிளாஸ்டிக்) பயன் பாடில்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.
Tags:    

Similar News