இந்தியா
அமித் ஷா

உ.பி.யில் பெண்கள் எந்த அச்சமுமின்றி வாழ்கின்றனர்- அமித் ஷா பெருமிதம்

Published On 2021-12-02 10:09 GMT   |   Update On 2021-12-02 10:09 GMT
பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சகாரன்பூர்:

உத்தரப்பிரதேச மாநிலம் புன்வர்கா கிராம பகுதியில் மா ஷக்கும்பரி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று அடிக்கல் நாட்டினார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், இதற்கு முன்னர் உத்தரப்பிரதேசத்தில் மாபியா மற்றும் குற்றவாளிகளின் ஆட்சியே நடைபெற்றது என்றார். ஆனால் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் அவர் கூறினார். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதால் பெண்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார். 

குற்றவாளிகளுக்கு பயந்து  வெளி மாநிலங்களுக்கு பெண் குழந்தைகளை படிக்க அனுப்ப வேண்டிய நிலைமை தற்போது உத்தரப்பிரதேசத்தில் இல்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
Tags:    

Similar News