செய்திகள்
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் எப்போது? இன்று அறிவிப்பு வெளியாகிறது

Published On 2021-02-26 06:28 GMT   |   Update On 2021-02-26 06:28 GMT
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது.
புதுடெல்லி:

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதி நிறைவடைகிறது. இதேபோல, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் மே-ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு சட்டசபை காலியாக உள்ளது.

இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களிலும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். 

மாநிலங்களில் உள்ள சூழல்களை தேர்தல் குழுவினர் ஆய்வு செய்ததுடன், தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தனர். தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என தலைவர்கள் கூறி உள்ளனர். 

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். அப்போது, தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்படுகிறது.
Tags:    

Similar News