உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பகவத்கீதை ஆன்லைன் பயிற்சி வகுப்பு

Published On 2022-01-13 09:02 GMT   |   Update On 2022-01-13 09:02 GMT
நெல்லையில் இஸ்கான் கோவில் சார்பில் பகவத்கீதையை மக்கள் படித்து புரிந்து கொள்ளும வகையில் ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
நெல்லை:

பகவத்கீதையை மக்கள் படித்து புரிந்து கொள்ளவும், கீதையின் கருத்துக்களை வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் ‘பகவத் கீதை அமுதம்’ என்ற ஆன்லைன் வகுப்பை நெல்லை இஸ்கான் நடத்துகிறது.

அடுத்த வகுப்ப 21-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 7-ந்தேதி வரை 18 நாட்கள் தினமும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடக்கிறது. இதற்கு கட்டணம் கிடையாது. 

முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்பவர்கள் என்ற இணையதளம் மூலம் அல்லது 7010641131 வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சியில் பங்கேற்று தினமும் அனுப்பப்படும் வினாக்களுக்கு பதில் அளித்து பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. 

ஏற்பாடுகளை தென் தமிழக இஸ்கான் மண்டல செயலாளர் சங்கதாரி பிரபு மற்றும் இஸ்கான் குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News